Monday, April 13, 2009

இன்றைய இளைஞன்

காலை கதிரவனை கண்டதுமில்லை
காதலிக்க நேரமுமில்லை
கணப்பொழுதில் கண் விழித்தேன்
காலை மணி எட்டுக்கு
கண் இமைக்கும் நேரத்தில்
மின்னலாய் தயாராகி
கண்ணாடி முன் நின்று
அலங்காரமாய் அரை மணி நேரம்
அவசரமாய் அலுவலகத்திற்கு
காலை கதிரவனின்
கருணை வெயிலில் நடந்தேன்

பேருந்து நிலையமா பெருங்கூட்டமா
சாகசங்கள் பல செய்து
பேருந்தினுள் ஏறி
அலுவலக நிறுத்தத்தில்
அலங்கோலமாய் இறங்கினாலும்
அரை மணி அலங்காரம்
அரை வினாடியில் தயாராகி
இலவச இணைப்பாய் செயற்கை புன்னகையோடு
அலுவலகத்தை அடைந்தேன்

ஆரம்பித்த அலுவலக பணி
கதிரவன் கண் மறைந்து
வெண்ணிலா வெளியே வந்தும்
முடியாமல் நீளுமே

காலை காட்டிய சாகசங்கள்
கொஞ்சமும் குறையாமல்
கூட்டினுள் வந்து விழுந்தேன்

பல மணி நேரம்
பயங்கரமாய் தயாராகிய
இரவு உணவு
சில நிமிடத்தில் சிறை கொண்டதோ
வயரினுள் - நடுநிசியில்

நாளை காலையேணும்
கதிரவனை காணமுடியும்
நம்பிக்கையில்

Wednesday, February 25, 2009

என்
உயிர்பூவே
உன்
மூச்சு காத்து பட்டு

இந்த
பூமி பந்து
சுழல்கிறது

உன் விழி வெளிச்சத்தில்
இந்த
சூர்ய சந்திரர்
ஒளி பெறுகின்றனர்

வைரமுத்து கவிதை

இருபதுகளில் ....

எழு
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு

ஜன்னல்களைத் திறந்து வை

படி

எதையும் படி
வத்சாயணம் கூடக்
காமமல்ல - கல்விதான்

படி

பிறகு
புத்தகங்களை எல்லா
ம்
உன்

பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா

உன் சட்டை பொத்தான்
கடிகாரம்
காதல்
சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டதால்
எந்திர அறிவுகொள்

ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட
ஆணியே பலம்

மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்

சப்தங்கள் படி

சூழ்ச்சிகள் அறி

பூமியில் நின்று
வானத்தை பார்

வானத்தில் நின்று
பூமியை பார்

உன் திசையை தேர்வு செய்
நுரைக்க நுரைக்கக் காதலி

காதலைச் சுகி
காதலில் அழு

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம்புரி

பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்
மிச்சமெல்லாம் உனக்கு

வாழ்க்கை
யென்பது
உழைப்பும்
துய்ப்புமென்று உணர்

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து
இன்னும்... இன்னும்...
சூரியக்கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில் ...


முப்பதுகளில் ...


சுறுசுறுப்பில் தேனீ யாயிறு
நிதானத்தில் ஞானியாயிரு

உறங்குதல் சுருக்கு
உழை
நித்தம் கலவி கொள்

உட்காரமுடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்
கைப்பற்று

ஆயுதம் தயாரி
பயன்படுத்தாதே

எதிரிகளை பேசவிடு
சிறுநீர்
கழிக்கையில் சிரி

வேர்களை
இடி பிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு

கிளைகளை
சூரியனுக்கு நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு

நிலை கொள்


நாற்பதுகளில் ...


இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்

செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி

எதிரிகளை ஒழி
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு

ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக் குழிவெட்டச்சொல்

அதில்
இருவரையும் புதை

பொருள் சேர்

இருகையால் ஈட்டு
ஒரு கையாலேனும் கொடு

பகல் தூக்கம் போடு

கவனம்
இன்னொரு காதல் வரும்
புன்னகைவரை போ
புடவை தொடதே

இதுவரை
லட்சியம்தானே
உனது இலக்கு

இனிமேல்
லட்சியத்துக்கு நீதான்
இலக்கு


ஐம்பதுகளில் ...

வாழ்க்கை - வழுக்கை
இரண்டையும் ரசி

கொழுப்பைக் குறை

முட்டையின் வெண்கரு
காய்கறி கீரை கொள்

கணக்குப் பார்

நீ மனிதனா என்று
வாழ்க்கையை கேள்

இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே
விழா எடுக்காதே


அறுபதுகளில் ...


இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது

இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்

விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கி விடு

மனிதர்கள் போதும்

முயல் வளர்த்து பார்
நாயோடு தூங்கு
கிளியோடு பேசு

மனைவிக்கு பேன்பார்

பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது


எழுபதுக்கு மேல் ...


இந்தியாவில்
இது உபரி

சுடுகாடுவரை நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ

ஜன கண மன....

வைரமுத்து கவிதை





Thursday, January 29, 2009

சுப்பிரமணிய பாரதி-கவிதைகள்





சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.